திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 21 ஏப்ரல் 2018 (13:16 IST)

பணமதிப்பிழப்புக்கு பின் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு; அதிர்ச்சி தகவல்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வு பிரிவு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

 
கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரும் சிரமப்பட்டது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காரணம் கூறப்பட்டது.
 
இந்நிலையில் இப்போது புலனாய்வு பிரிவு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் நிதியாண்டில் கள்ள ரூபாய் நோட்டுகளில் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில் அதற்கான சான்றுகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது.