1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (17:37 IST)

டாப் 10 ஸ்மார்ட்போன்!! ரெட்மியிடம் தோத்துப்போன ஐபோன்...

கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அந்நிறுவம் Year in Search என்ற பட்டியலின் கீழ் வெளியிட்டுள்ளது. 
 
ஆண்டுதோறும் நாடுகள் அளவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலை கூகிள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த முறையும் 2019ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள், புதிய நபர்கள் ஆகியோரின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.
 
அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் எவை என்கிற பட்டியல் வெளியாகியுள்ளது. அவற்றின் லிஸ்ட் இதோ... 
 
1. சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ
2. சாம்சங் கேலக்ஸி எம்20
3. விவோ எஸ் 1
4. சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ
5. சியோமி ரெட்மி நோட் 7
6. ஆப்பிள் ஐபோன் 11
7. ஒன்பிளஸ் 7
8. ரியல்மி 3 ப்ரோ
9. ரியல்மி 5
10. விவோ இசட் 1 ப்ரோ