விலை குறைந்த விவோ ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?

Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 5 நவம்பர் 2019 (16:11 IST)
விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல் மீது விலை குறைப்பை நிகழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ அவ்வப்போது தனது ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைப்பை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விவோ வை91 மற்றும் வை91ஐ ஸ்மார்ட்போன் மாடல்கள் மீதான விலை குறைப்பட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரு ஸ்மார்ட்போன்களும் ரூ. 10,990 மற்றும் ரூ. 7,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.பின்னர் மே மாதத்தில் இரு முறை குறைக்கப்பட்டதையடுத்து தற்போது மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. 
 
விலை விவரம்: 
விவோ வை91 3 ஜி.பி. ராம், 32 ஜிபி மெமரி மாடல் ரூ. 8,490 
விவோ வை91ஐ 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி மாடல் ரூ. 6,990 


இதில் மேலும் படிக்கவும் :