1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. பிஃபா 2018
Written By
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2019 (06:33 IST)

13 பந்தில் 48 ரன்கள்: ரஸல் அதிரடியால் பெங்களூரை வீழ்த்தியது கொல்கத்தா

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடரில் இதுவரை ஒரு வெற்றியை கூட ருசிக்காத பெங்களூரு அணி, நேற்றைய போட்டியிலும் கொல்கத்தா அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. விராத் கோஹ்லி 84 ரன்களும், டிவில்லியர்ஸ் 63 ரன்களும் குவித்தனர்.
 
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஸல் 13 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து சாதனை செய்தார். இதில் 7 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
18 ஓவர் முடிவில் 12 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் செளதி போட்ட ஒரு ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என மொத்தம் 29 ரன்கள் ரஸல் அடித்தார். இதுவே கொல்கத்தா வெற்றிக்கு காரணமாகியது.
 
லின் 43 ரன்களும், உத்தப்பா 33 ரன்களும், ரானா 37 ரன்களும் எடுத்தனர். ரஸல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.