புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பண்டிகைகள்
Written By

ரமலான் நோன்பின் சிறப்புகளும் ஈகையின் மகத்துவமும்!!

ஈகையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது ரமலான் பண்டிகை. இந்த ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத  பெருநாளாகும்.
இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும்,  ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தைப் பொறுத்தவரை எல்லா  இஸ்லாமியர்களுக்குமே, அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் மாதமாகவும் உள்ளது.
 
இந்த மாதத்தில் சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், சாத்தான்கள் விலகி ஓடும் மாதமாகவும்,  நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும், நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் திருக்குர் ஆன், இப்பூவுலகில் அருளப்பட்ட மாதம் என  அனைத்தும் அருள் நிறைந்த மாதமாக இருப்பதால், சிற்சில காரணங்களுக்காக ஒரு சிலர் தவிர அனைவருமே நோன்பு இருக்க என்றுமே  தவறுவதில்லை.
மனித வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், கணக்கு இருக்கிறது. நாம் செய்யும் நன்மை தீமைகள், நம் இறப்பிற்குப் பிறகு நம்மை வந்து சேரும் என்ற நம்பிக்கையும் இஸ்லாமியர்களால் கடைப்பிடைக்கப்பட்டு வருகிறது.