வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சித்ரா பெளர்ணமியில் இறை வழிபாட்டின் சிறப்புகள்....!

அமாவாசைகளில் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை போல பெளர்ணமிகளில் சித்ரா பெளர்ணமிக்கென்று சில சிறப்புக்கள் உள்ளன.  பூமியை சுற்றி வரும் சந்திரன் அன்று முழு பிரகாசத்துடன் காட்சி தருவார். அதாவது அன்றைய தினத்தின் சந்திர ஒளி (பூரண கலை) மற்ற  பெளர்ணமிகளை விட பொலிவாக இருக்கும்.
பெளர்ணமி அன்று மலைக்கோவில்களுக்கு சென்று கிரிவலம் வருதல் சிறப்பு. சித்ரா பெளர்ணமி அன்று கிரிவலம் வருதல் பன்மடங்கு சிறப்பு. மேலும் இந்த நாளானது சித்திர குப்தனின் அவதாரத் திருநாளாகும்.
 
சித்திரை மாதத்தில் பெளர்ணமி அன்று சிவபெருமாள், பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் சித்திரகுப்தன். சித்திரகுப்தன் எமதர்மனின்  கணக்குப் பிள்ளை. நாம் செய்யும் பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்ப நமது சொர்க்க நரகத்தையும் அடுத்த பிறவியையும் முடிவு செய்பவர்.  எனவே அன்று கிரிவலம்.
 
இறைவனை வழிபடும் அதே வேளையில் சித்திரகுப்தனையும் மனதில் நினைத்து இப்பிறவியும் அடுத்த பிறவியும் நல்ல பிறவிகளாக  அமையும் படி பிரார்த்திக்க வேண்டும்.
 
திருவண்ணாமலையிலும் காஞ்சிபுரத்திலும் சித்திரகுப்தனுக்குத் தனியாக ஒரு கோயில் உள்ளது. சித்ரா பெளர்ணமி அன்று புண்ணிய  நதிகளிலும் சமுத்திரத்திலும் நீராடுவது சிறப்பு. சித்திரை நட்சத்திரமும் பெளர்ணமியும் சேர்ந்து வருதலால் சித்ரா பெளர்ணமி அன்று கடல்  நீராடுதல் சாலவும் சிறந்தது.
 
காரணம் என்னவெனில் அன்றைய தினம் சமுத்திரத்தில் நீராடுபவர்களின் பாவங்களை அகற்றி அவர்களுக்கு தூய்மை செய்ய பித்ரு தேவதைகள், மகரிஷிகள், சித்தர்கள், யோகியர்கள் தயாராக இருப்பார்கள் என்பது ஐதீகம்.