சிவனுக்கு உகந்த வில்வத்தின் ஆன்மிக பலன்கள்...!

சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரனாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில்வைத்து வளர்க்கலாம். வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன.
சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க   வேண்டும்
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூஜை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
 
வில்வ இலையால் அர்ச்சிப்பது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதால் அசுவமேத யாகம் செய்த பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம்   செய்த பலனும் கிடைக்கும். 
 
சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் (சிவபெருமானின் திருவருளை) கடாட்சத்தைப் பெறமுடியும். சிவ   வழிபாட்டின் போது வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வெற்றிகள் வீடு தேடி வரும்.
 
வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு  ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது.
 
ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்.  வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக்   கொள்ளப்படுகிறது.
 
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க  வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச்   சொல்ல வேண்டும்.
 
மந்திரம்:
 
நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மே
 
இதன் பொருள்: கமோட்ச உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ  மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமான சாம்பசிவனின் பூஜைக்காக  தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப்
பறிக்க வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :