1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Vishnu's ten incarnations; What is the doctrine of thinking...?

விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் உணர்த்தும் தத்துவம் என்ன....?

பகவான் விஷ்ணு
மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மனிதருக்கு வாழும் நெறியைக் காட்டிய அவதாரங்களில் ராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும் தனிச் சிறப்பைப் பெற்ற அவதாரங்கள்.
மச்ச அவதாரம்: தாயின் வயிற்றில் இருந்து ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.
 
கூர்ம அவதாரம்: மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
 
வராக அவதாரம்: ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
 
நரசிம்ம அவதாரம்: எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம்.
 
வாமண அவதாரம்: ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
 
பரசுராம அவதாரம்: வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
 
ராம அவதாரம் : திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.
 
பலராம அவதாரம்: இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
 
கிருஷ்ண அவதாரம்: முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
 
கல்கி அவதாரம்: இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாய்  முக்தி பெறுவது.
அடுத்த கட்டுரையில்
பரிகாரங்கள் சில நேரங்களில் பலனளிக்காமல் போவதற்கான காரணம் என்ன...?