1. பொழுதுபோக்கு
  2. »
  3. சின்னத்திரை
  4. »
  5. செய்திகள்

ஜெயா தொலைக்காட்சியில் நவராத்திரி சிறப்பு

ஜெயா தொலைக்காட்சியில் நவராத்திரி சிறப்பு
ஜெயா டி.வி.யில் நவராத்திரி பூஜையையொட்டி வருகிற 21-ந் தேதி வரை தினந்தோறும் மாலை 5.30 மணிக்கு `நலம் தரும் நவராத்திரி' என்ற தலைப்பில் சிறப்பு இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களைப் பற்றியும், நவராத்திரியின் பூஜைகள் குறித்தும், மகதி, பூர்ணிமா கிருஷ்ணன், பிரியதர்ஷினி வரதராஜன், பி.பிரார்த்தனா ராவ், ரஞ்சனி ஹெப்பார், கே.காயத்ரி, நிரஞ்சனா ஹரிஹரன், நிஷா ராஜகோபால், வித்யா கல்யாணராமன், அம்ருதா வெங்கடேஷ், புஷ்பநாயகி ஆகியோர் பாடுகிறார்கள்.

இந்த இசை நிகழ்ச்சி நவராத்திரி கொலு வைத்திருப்பவர்களின் இல்லங்களில் கேட்டு ரசிக்க உகந்ததாக அமையும்.
About Writer
Webdunia