1. பொழுதுபோக்கு
  2. »
  3. சுற்றுலா
  4. »
  5. சு‌ற்றுலா செ‌‌ய்‌தி

சுற்றுலாப் பொருட்காட்சி 22ம் தேதி துவக்கம்

சுற்றுலாப் பொருட்காட்சி சென்னைத் தீவுத்திடல்
சென்னைத் தீவுத் திடலில் ஆண்டு தோறும் அமைக்கப்படும் சுற்றுலாப் பொருட்காட்சி வரும் 22ம் தேதியே துவக்கப்பட உள்ளது.

ஆண்டு தோறும் ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி ஒன்றாம் தேதி துவங்கி தமிழ்ப் புத்தாண்டு அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி வரை சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கடந்த ஆண்டு முதல் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு முன்பாகவே சுற்றுலாப் பொருட்காட்சியைத் திறக்க சுற்றுலாத் துறை முடிவு செய்தது.

அதன்படி இந்த ஆண்டும் டிசம்பர் 22ஆம் தேதியே சுற்றுலாப் பொருட்காட்சி திறக்கப்பட உள்ளது.

இதையொட்டி கடைகள், விளையாட்டு அரங்குகள், கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
About Writer
Webdunia