1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

புது தொழில் தொடங்கும் ப்ரியதர்ஷன்!

ப்ரியதர்ஷன் ஹைடெக் ஒலிக்கூடம்
சம்பாதித்த பணத்தை சாதுர்யமாக முதலீடு செய்வதில் மோகன் லாலுக்கு முதலிடம் என்றால், இரண்டாம் இடம் அவரது நண்பர் இயக்குனர் ப்ரியதர்ஷனுக்கு.

படம் இயக்குவதுடன் விளம்பர நிறுவனம் ப்ரிவியூ தியேட்டர் உள்பட பல பிஸினஸ் இவருக்கு. கூடுதலாக சவுண்ட் ஸ்டுடியோ ஒன்றையும் திறக்கிறார், சிங்கப்பூரில்!

சிங்கப்பூரில் ப்ரியதர்ஷன் லிசி தம்பதியரின் குழந்தைகள் படித்து வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு செவாந்தமான வீடும் உண்டு. சிங்கப்பூரில் சிறந்த சவுண்ட் ஸ்டுடியோ இல்லாததால் அங்குள்ள விளம்பரப் பட இயக்குனர்கள் சவுண்ட் மிக்ஸிங்கிற்கு ஹாங்காங் போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை.

இதனை மனதில் வைத்து ஹைடெக் ஒலிக்கூடம் ஒன்றை சிங்கப்பூரில் தொடங்குகிறார் ப்ரியதர்ஷன். காசு பார்க்கத் தெரிந்த கலைஞன்!
About Writer
Webdunia