1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

சிம்பு படம் - யுவனுக்கு பதில் பி.எஸ். தரண்!

சிம்பு யுவன் சிலம்பாட்டம்
சிம்புவுக்கு இசை என்றால் யுவன். சிலம்பாட்டம் படத்தில் தினாவை பாதியில் கழற்றிவிட்டு யுவனை சேர்த்துக் கொண்டார்.

யுவன் எனும் இரும்பு கோட்டையை உடைத்து சிம்புவை வேறு இசையமைப்பாளரால் எட்ட முடியுமா? சான்ஸே இல்லை! இந்த சவாலான விஷயத்தை ஒரு இளைஞர் சாதித்திருக்கிறார் என்றால் அது சாதனையான விஷயம்தானே.

அந்த இளைஞர் பி.எஸ். தரண். இவர் போட்டுக் காட்டிய சில டியூன்களில் மாட்டிக் கொண்டுவிட்டாராம் சிம்பு. உடனே அட்வான்ஸ் கொடுத்து ஆளை பிடித்துப் போட்டிருக்கிறார். சிம்புவின் போடா போடிக்கு இவர்தான் இசை.

பி.எஸ். தரணின் இந்த சாதனை அறிந்து அவருக்கு வாய்ப்புகள் குவிகிறது. திறமை இருந்தால் உலகை ஆளலாம்!
About Writer
Webdunia