1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

த‌ள்‌ளி‌ப்போகு‌ம் ஏக‌ன் வெ‌ளி‌யீடு!

அ‌ஜி‌த் ஏ‌க‌ன் ஷாரு‌க்கா‌ன்
அ‌ஜி‌த் ர‌சிக‌ர்களு‌க்கு ‌ஜீர‌ணி‌க்க க‌ஷ்டமான செ‌ய்‌தி. ஏ‌க‌ன் வெ‌ளியாகு‌ம் தே‌தி ‌மீ‌ண்டு‌ம் ஐ‌ந்து நா‌ட்க‌ள் த‌ள்‌ளி‌ப் போட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஷாரு‌க்கா‌ன் நடி‌த்த Main Hoon Na பட‌த்‌தி‌‌ன் ‌‌ரீ-மே‌க்கான ஏகனை ராஜு சு‌ந்தர‌ம் இய‌க்‌கி வரு‌கிறா‌ர். தொட‌ர்‌ச்‌சியாக பட‌ப்‌பிடி‌ப்பை நட‌த்‌தி வ‌ந்ததா‌ல், வெகு ‌சீ‌க்‌கிர‌ம் ஏக‌ன் ‌திரை‌க்கு வரு‌ம் என எ‌‌தி‌ர்பா‌ர்‌த்தன‌ர்.

ஆனா‌ல், அ‌க்டோப‌ர் 19ஆ‌ம் தே‌தியே ஏக‌ன் வெ‌ளியா‌கிறது எ‌ன்றன‌ர் தயா‌ரி‌ப்பாள‌ர் தர‌ப்பி‌ல். இ‌ப்போது இ‌திலு‌ம் மா‌ற்ற‌ம்.

‌தீபாவ‌ளி‌க்கு மூ‌ன்று நா‌ட்க‌ள் மு‌ன்னதாக, அதாவது அ‌க்டோப‌ர் 24ஆ‌ம் தே‌தி‌‌க்கு ஏக‌ன் வெ‌ளி‌யீடு த‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. மு‌ன்னதாக செ‌ப்ட‌ம்ப‌ர் இறு‌‌தி‌‌யி‌ல் ஏக‌ன் இசை வெ‌‌ளி‌யீ‌ட்டை நட‌த்த ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன‌ர்.

ஆ‌க்க‌ப் பொறு‌த்த 'தல' ர‌சிக‌ர்க‌ள் ஐ‌ந்து நா‌ள் தாமத‌த்தை பொறு‌த்துதா‌ன் ஆக வே‌ண்டு‌ம்.