1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By ஏ.சினோஜ்கியான்
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (23:25 IST)

தீபாவளியில் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்….

தீமையை அழித்த கடவுள் மக்களுக்குப் பூமியி நன்மையை நிலைநாட்டுகிறார். அந்தக் கடவுள் கோயிலிலும் பரலோகத்திலும் பூமியில் தூணிலும் துரும்பிலும் இருந்து மக்களுக்கு நன்மைக்கான வழியைக் காட்டி வருகிறார்.

ஆனால் சிலர் இன்னும் மக்களை வருத்தும் செயல்களில் மூழ்கி, போதைப் பொருட்களில் வாழ்கையை தொலைத்து மனம் திருத்த முடியாமல் வாழ்கிறார்கள்.

அதுவும் நாம் நமக்கும் நம்மை நம்பியிருப்பவர்களுக்கும் இழைக்கும் தீமைதான்.

எனவே ஒளியில் வாழும் இறைவன் என்று நாம் கூறுவதுபோல் வரும் தீப ஒளித்திருநாளில் நம் தவற்றை ஒப்புக்கொடுத்துவிட்டு புது மனிதராக இருளிலிருந்து நாம் வெளிவருவோம்.


ஏற்கனவே நன்மை செய்துகொண்டிருந்தால் அந்த எண்ணிக்கையை நாம் மேலும் அதிகப்படுத்துவோம்.