திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (21:01 IST)

நிரந்தரமாய் கையை கழுவுங்கள் …மோடி ஜி உணர்த்திய பாடம்இது – குஷ்பு டுவீட்

ஒசூரில் தடையை மீறி வேல் யாத்திரையில் ஈடுபட்ட பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து முருகன் கூறியவதாவது :

டிசம்பர்-6ல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்கும்  வரை ஓயப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிரச்சனைகளைத் தாண்டி பீனிக்ஸ் பறவையாக திருச்செந்தூர் சென்றடைவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், அடிக்கடி கை கழுவுங்கள் இது corona சொல்லிய பாடம் நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம் வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்! எனத் தெரிவித்துள்ளார். மேலும் இப்பதிவை அவர் பாஜக தமிழக தலைவர்  முருகனுக்கும் டேக் செய்துள்ளார்.