வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By
Last Updated : புதன், 1 ஆகஸ்ட் 2018 (20:15 IST)

தோழமையை பகிர்வோம்... கொண்டாடுவோம்...

எரிமலை இல்லாத, ஆறுகள் இல்லாத ஏன் திரையரங்குகள் கூட இல்லாத நாடுகள் இருக்கின்றன. ஆனால், நண்பர்கள் இல்லாத நாடுகள் என்று ஏதும் இல்லை. 
அத்தகைய மகத்துவம் வாய்ந்த நட்பினை, நட்பின் உயர்வினை கொண்டாட, கூடி மகிழ அன்பினை பரிமாறி ஆரவாரம் செய்ய எல்லாராலும் ஏற்று கொள்ளப்பட்ட தினமே நண்பர்கள் தினம்.
 
வயது வரம்பு இல்லாமல், பாலினம் பாராமல் பலராலும் பருகப்படுவதும், பாராட்டப்படுவதும் தொட்டுத் தொடருவதும் இந்த தோழமைதான்.இதற்கு முன்னோடியாக இருந்தது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் 1935 ஆம் ஆண்டு ந‌ட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. 
 
அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்று கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
 
அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.