வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: செவ்வாய், 31 ஜூலை 2018 (18:09 IST)

ஆகஸ்டு மாத ராசி பலன்கள் - தனுசு

இந்த மாதம் ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் இருக்க ராசியில் சனி பகவானின் சஞ்சாரம் வக்ர கதியில் அமைந்திருக்கிறது. பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். பஞ்சம விரையாதிபதி செவ்வாயின் தனஸ்தான சஞ்சாரம் சுப பலன்களை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனாலும் ஏழரை சனியின் காலகட்டத்தில் இருப்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எதிலும் பொறுமை நிதானம் அவசியம்.

தொழில் ஸ்தானாதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் இருப்பது நல்ல அம்சம். லாபாதிபதி சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் இருப்பதும் பலம் சேர்க்கும்.  தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

அரசியல்துறையினர் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுவது அவசியம்.

கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும். ஆசிரியர் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

உடல்நலத்தினை பொறுத்தவரை அதிக கவனம் சிரத்தை அவசியம். புளிப்பு சம்பந்தமான உணவுகளை தவிர்க்க வேண்டும். கை கால் உளைச்சல் ஏற்படலாம்.

மூலம்:
இந்த மாதம் வரவுக்கு எந்த வித குறையும் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள்.

பூராடம்:
இந்த மாதம் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும்.

உத்திராடம்:
இந்த மாதம் பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். எதை பேசினாலும் அவமானம் என்று இருந்த நிலை மாறும்.

  
பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31