வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: செவ்வாய், 31 ஜூலை 2018 (18:05 IST)

ஆகஸ்டு மாத ராசி பலன்கள் - விருச்சிகம்

இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் தைரிய வீர்ய ஸ்தானத்தில் உச்சமாக கேதுவுடன் இணைந்து பயணிக்கிறார். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் ஆராய்ந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நன்மை அளிக்கும். வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். எதிர்பார்த்தபடி எதுவும் நல்லதாகவே நடக்கும். குருவின் விரைய ஸ்தான சஞ்சாரத்தால் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

தொழில் ஸ்தானத்தில் சப்தமாதிபதி சுக்கிரன் அமர தொழில் ஸ்தானாதிபதி சூரியன் பாக்கியஸ்தானத்தை புதன் மற்றும் ராகுவுடன் இணைந்து அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.

குடும்பஸ்தானத்தில் சனி சஞ்சரித்தாலும் குடும்பாதிபதி குருவின் சார பலத்தால் குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.    

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. 

அரசியல்துறையினரின் செல்வாக்கு உயரும். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். சொன்ன வாக்கினை காப்பாற்றுவதற்கு நண்பர்கள் உறுதுணை புரிவார்கள்.

கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். மேற்படிப்பிற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

உடல்நலத்தினை பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ செலவுகள் குறையும்.

விசாகம்:
இந்த மாதம் தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.

அனுஷம்:
இந்த மாதம் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது. ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். உபதொழில் ஆரம்பிக்க வாய்ப்புகள் குவியும்.

கேட்டை:
இந்த மாதம் ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு கட்டும் பணியோ அல்லது நிலம் வாங்கும் பணியோ மேற்கொள்வீர்கள். மிக நல்ல பலன்களை தடையின்றி அனுபவிப்பீர்கள். திட்டமிட்ட சில காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள்.

பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 29, 30