வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: செவ்வாய், 31 ஜூலை 2018 (18:19 IST)

ஆகஸ்டு மாத ராசி பலன்கள் - மகரம்

இந்த மாதம் ராசிநாதன் சனி விரையஸ்தானத்தில் வக்ரமாக சஞ்சரித்தாலும் ராசியில் செவ்வாய் கேதுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். ராசியை சூரியன் - புதன் ஆகியோர் பார்க்கிறார்கள். எத்தனை தடை வந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காண்பீர்கள். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சுக்கிரன்  அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்தாலும் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தை குரு பகவான் அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.

குடும்ப ஸ்தானத்தை குரு - சுக்கிரன் - சனி ஆகியோர் பார்க்கிறார்கள்.  குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

அரசியல்துறையினர் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கல் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

உடல்நலத்தினை பொறுத்தவரை மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். எந்த விஷயத்திலும் அதிக வேகத்தை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

உத்திராடம்:
இந்த மாதம் வாழ்க்கைத்துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்களை வந்து அடையும் நேரமிது.

திருவோணம்:
இந்த மாதம் முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள்.

அவிட்டம்:
இந்த மாதம் வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7