வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By

சென்னைக்கு வந்த 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்!

கோப்புப் படம்
பூனேவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலமாக கோவிஷீல்டு ஊசிகள் வந்தடைந்துள்ளன.

தமிழகத்தில் மிக வேகமாகவும் அதிக எண்ணிக்கையிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதால் தடுப்பூசி கையிருப்பு இல்லை. சில தினங்களுக்கு முன்னர் வெறும் 1060 தடுப்பூசிகள்தான் கையிருப்பு இருப்பதாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் ம சுப்ரமண்யன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது பூனேவின் சீரம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் விமானம் மூலமாக தமிழகத்துக்கு சுமார் 3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன. அவை இன்று மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட உள்ளன.