பாகுபலியாய் நிற்கும் நியூஸிலாந்த்: பாகிஸ்தானின் ஆட்டம் எடுபடுமா?
இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 33 ஆவது லீக் ஆட்டத்தில், இன்று நியூஸிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
2019 ஆம் ஆண்டின் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள், இங்கிலாந்து நாட்டில் மும்முரமாக நடந்துவருகிறது.
இந்நிலையில் 33 ஆவது லீக் போட்டியான இன்று, நியூஸிலாந்து-பாகிஸ்தான் அணிகள், பிர்மிங்கம் நகரில் மோதுகின்றன.
நியூஸிலாந்து அணி, கடந்த 6 போட்டிகளில் 5 போட்டிகளை வென்ற நிலையில் தற்போது புள்ளி விவரப் பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி, கடந்த 6 போட்டிகளில் 2 போட்டிகளை மட்டுமே வென்ற நிலையில், தற்போது புள்ளிவிவரப் பட்டியலில் 7 ஆவது இடத்தில் இருக்கிறது.
இந்த உலக கோப்பையில் நியூஸிலாந்து அணி பாகுபலி போல் பலமான அணியாக உள்ளது. ஆதலால் மிகவும் பலவீனமான அணியாகிய பாகிஸ்தான் அணிக்கு இன்று பெரும் சோதனையாக முடியும் என சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
எனினும், இன்று நடக்கவிருக்கிற போட்டியில் பாகிஸ்தான் அணி திணறப்போகிறதா அல்ல நியூஸிலாந்தை திணறடிக்கபோகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.