இந்தியாவை எங்களால் வெல்ல முடியும் – ஷகிப் உல் ஹசன் சவால் !

Last Modified செவ்வாய், 25 ஜூன் 2019 (12:47 IST)
பங்களாதேஷ் அணியின் ஷகீப் உல் ஹசன் இந்தியாவைத் தங்கள் அணியால் வெல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. வலிமை மிக்க தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வென்று அவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்நிலையில் அந்த அணிக்கு அடுத்து வரும் இரண்டு போட்டிகள் மிக முக்கியமானவை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறி செல்ல முடியும்.

நேற்று ஆப்கானிஸ்தான் அணியோடு நடந்த போட்டியில் வெற்றி பெற்ற பின் அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் உல் ஹசன் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘இந்தியா இதுவரை எந்தப் போட்டிகளிலும் தோல்வி அடையாமல் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவை எங்களால் எளிதாக வெல்ல முடியாது என எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் எங்கள் சிறப்பான பங்களிப்பை அளிப்போம். இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த சில வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுவோம்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :