கடைசி ஓவர் வரை நின்னு ஆடனும்... தோனிக்கு சச்சின் திடீர் சப்போர்ட்!
தோனி களத்தில் நின்று விளையாடுவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியால் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆட முடியாமல் போனது. அதேபோல், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியோடு மோதிய போதும் தோனி கடைசியில் சரியாக விளையாடவில்லை.
இதனை சச்சின், ஜாதவ் - தோனி பார்ட்னர்ஷிப் சரியாக எடுபடவில்லை. தோனி பழையமாதிரி சிறப்பான ஆட்டத்தை தரவில்லை என விமர்சனம் செய்திருந்தார். அதன் பின்னர் அவர் தோனிக்கு ஆதரவாகவும் பேசினார்.
இந்நிலையில் தோனி களத்தில் நின்று விளையாடுவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. அணிக்கு என்ன தேவை என்பதை அவர் சரியாக அறிந்து வைத்திருக்கிறார் தோனி.
போட்டியின் 50 ஓவர் வரை அவர் களத்தில் நீடித்து இருக்க வேண்டும். இது மற்ற வீரர்களுக்கு உதவியாக இருக்கும். எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அவர் பூர்த்தி செய்யக்கூடியவர் என சச்சின் தோனிக்கு ஆதரவாக மீண்டும் பேசியுள்ளார்.