வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (19:06 IST)

கோஹ்லி, தோனி அரைசதம் – வெஸ்ட் இண்டீஸுக்கு 269 ரன்கள் இலக்கு !

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா(18), விஜய் சங்கர்(14), கேதார் ஜாதவ்(7) ஆகியோர் சொதப்ப, கே எல் ராகுல்லோடு கூட்டணி அமைத்து கோஹ்லி அணியை சரிவில் இருந்து மீட்டார். கே எல் ராகுல் 48 ரன்களில் அவுட் ஆக, தோனியோடு கைகோர்த்தார்.

ஒருபுறம் தோனி வழக்கம் போல கட்டையைப் போட கோஹ்லி நிதானமாக விளையாடி ரன்ரேட்டை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றினார். சிறப்பாக விளையாடிய கோஹ்லி எதிர்பாராத விதமாக 72 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்தர் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 46 ரன்களில் அவுட் ஆனார். கடைசி நேரம் வரைப் பொறுமையை சோதித்த தோனி இறுதியில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 61 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோச் 3 விக்கெட்களும், காட்ரெல் மற்று ஹோல்டர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.