எதிரணி பீல்டிங்கை சரிசெய்த தோனி – வைரலாகும் வீடியோ !

Last Updated: புதன், 29 மே 2019 (15:39 IST)
நேற்றைய பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எதிரணியின் பீல்டிங்கை சரி செய்தது வைரலாக பரவி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் அவர் அணியில் கேப்டனுக்கு உறுதுணையாக ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இதனால் தோனியை இன்னமும் கேப்டன் என்றே சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றையப் பயிற்சி ஆட்டத்தின் போது சதமடித்து அசத்திய தோனி ஆச்சர்யமானக் காரியம் ஒன்றையும் செய்துள்ளார். வஙகதேச சுழற்பந்து வீச்சாளர் ஷபிர் ரஹ்மான். அதை தோனி எதிர்கொள்ள தயாராக இருந்த போது பவுலர் சொன்ன இடத்தில் நிற்காமல் பீல்டர் வேறொரு இடத்தில் நின்றார். இதனைப் பார்த்த தோனி பவுலரை நிறுத்தி அந்த தவறை சுட்டிக்காட்டினார். இதனை உணர்ந்த பவுலர் பீல்டிங்கை சரிபடுத்திவிட்டு மீண்டும் பந்து வீசினார். இதனால் மைதானத்தில் இருந்த ராகுல் மற்றும் நடுவர் இருவரும் தோனியின் செயலை பார்த்து புன்னகைத்தனர்.

தோனியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவின் இணைப்பு 
https://twitter.com/i/status/1133478451929686016


இதில் மேலும் படிக்கவும் :