செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (20:33 IST)

தோனி, கே.எல்.ராகுல் அபார சதங்கள்: வங்கதேசத்துக்கு இமாலய இலக்கு!

உலகக்கோப்பைக்கு முந்தைய பயிற்சி போட்டியில் இந்திய அணி இன்று வங்கதேச அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவு செய்ததால் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. 
 
இன்றைய போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் விராத் கோஹ்லி ஓரளவுக்கு நிலைத்து ஆடி 47 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி, வங்கதேச பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தது. தோனி 78 பந்துகளில் 113 ரன்கள் அடித்தார். இதில் எட்டு பவுண்டர்களும் 7 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல் 99 பந்துகளில் 12 பவுண்டர்களும் 4 சிக்சர்களும் அடித்த கே.எல்.ராகுல் 108 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.
 
இந்த நிலையில் 360 என்ற இமாலய இலக்கை நோக்கி வங்கதேசம் தற்போது விளையாடி வருகிறது. அந்த அணி சற்றுமுன் வரை 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்துள்ளது