பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி :ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு ...
இன்று பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானோடு மோத இருக்கிறது. இந்த போட்டியே பாகிஸ்தானுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பாகும். இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் நயீப் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
உலகக்கோப்பையின் லீக் போட்டிகள் கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டன. கிட்டத்தட்ட அரையிறுதிக்கு செல்லும் 3 அணிகள் உறுதியாகிவிட்டன. நான்காவதாக செல்லும் அணிக்காக இங்கிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையில் கடுமையானப் போட்டி நிலவுகிறது.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து பாகிஸ்தான் ஆகிய அணிகள் இனிவரும் போட்டிகளில் தோற்கவேண்டும். அப்போதுதான் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லமுடியும்.
இதையடுத்து இன்று பாகிஸ்தான் வலிமை குறைந்த ஆப்கானிஸ்தான் அணியோடு மோத இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் மிகப்பெரிய மாரிஜினலோ அல்லது அதிக விக்கெட் வித்தியாசத்திலோ வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் ரன்ரேட் அதிகரிக்க முடியும். இதனால் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் தனது முழு திறமையையும் காட்டி விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணியும் இந்தியாவுன் தோற்றதற்குன் கடந்த போட்டியில் வெற்றிபெற்றது. அதனால் இம்முறையும் வெற்றிபெற்றி பெற கடுமையாக போராடுவார்கள் என்றே தெரிகிறது.