“இப்போது நான் கோலியை தொந்தரவு செய்வதில்லை…” யுவ்ராஜ் சிங் சொன்ன காரணம்!
இந்திய அணியில் கபில்தேவ்வுக்கு பிறகு நடுவரிசையை பலப்படுத்திய வீரர்களில் யுவ்ராஜ் சிங் முக்கியமானவர். நீண்ட காலமாக அவர் இந்திய அணிக்காக நான்காவது இடத்தில் விளையாடி மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளார்.
2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வென்ற தொடர்களில் மிகப்பெரிய அளவில் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். ஆனால் புற்றுநோய் பாதிப்புக்கு பிறகு அவரால் தொடர்ந்து இந்திய அணியில் ஆடமுடியவில்லை.
இந்நிலையில் இந்திய அணியில் தனது நெருங்கிய நண்பராக இருந்த கோலி குறித்து பேசியுள்ளார். அதில் “இப்போது கோலியோடு நான் பேசுவதில்லை. ஏனென்றால் அவர் இப்போது பிஸியாகிவிட்டார். அப்போது கோலி எங்களுக்கு சீக்கு. இப்போது சீக்குவின் பெயர் விராட் கோலி. அதனால் அவரை தொந்தரவு செய்வதில்லை. எல்லோருமே பிட்னெஸ் பற்றி அக்கறை கொள்வோம். ஆனால் கோலி இந்திய அணிக்கு கேப்டனாக பிறகு பிட்னெஸில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது” எனக் கூறியுள்ளார்.