செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2024 (17:13 IST)

கபில்தேவ்வை நான் பழிவாங்கிவிட்டதாக நினைக்கிறேன்… யோக்ராஜ் சிங்கின் அடுத்த தாக்குதல்!

இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார்.

இதையடுத்து யுவ்ராஜ் சிங்கின் கேரியர் மிக விரைவாக முடிய, தோனிதான் காரணம் என்று யோக்ராஜ் சிங் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அவர் மற்றொரு இந்திய கேப்டனான கபில் தேவ்வையும் தாக்குவது போல பேசியுள்ளார். யோகராஜ் பல முறை தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைவதற்குக் காரணமானவர்களில் கபில்தேவும் ஒருவர் என்று கூறியிருந்தார்.

இப்போது அதுபற்றி பேசியுள்ள அவர் “நான் கபில்தேவிடம் சொன்னேன், உன்னை ஒருநாள் இந்த உலகமே திட்டும் ஒரு இடத்தில் கொண்டு போய் நிறுத்துவேன் எனக் கூறினேன். இப்போது என் மகனின் கிரிக்கெட் கேரியரில் 13 கோப்பைகளைப் பெற்றுள்ளான். ஆனால் கபில்தேவ் ஒரே ஒரு கோப்பை மட்டும்தான் உள்ளது. இதோடு அதைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார்.