இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து முதல் நாள் ஆட்டமுடிவில் 6 விக்கெட்களை இழந்து 336 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து இன்று ஆட்டத்தை தொடங்கிய நிலையில் விரைவிலேயே அஸ்வின் விக்கெட்டை ஆண்டர்சன் கைப்பற்றினார். மறுமுனையில் இரட்டை சதத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த ஜெய்ஸ்வால் 191 ரன்களில் இருந்த போது அடுத்தடுத்து சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார்.
இதன் மூலம் மிகக்குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு முன்னர் முதல் இடத்தில் வினொத் காம்ப்ளி இடம்பிடித்துள்ளார்.