Daily Horoscope
✕

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

Written By vinoth
Updated: புதன், 18 செப்டம்பர் 2024 (13:42 IST)
கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் முக்கியமான போட்டி ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த போட்டியில் சிஎஸ்கே தனது இறுதி ஓவரில் இருந்தபோது 6 பந்துகளில் 17 ரன்கள் அடித்தால் ப்ளே ஆப் வாய்ப்பு உறுதியாகிவிடும் என்று இருந்தது.

அப்போது யஷ் தயால் பந்து வீச முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி இரண்டாவது பந்தில் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் எட்டக்கூடிய இலக்கையும் எட்ட முடியாமல் சிஎஸ்கே தோல்வியடைந்தது. இந்த ஒரே போட்டியில் கவனிக்கப்படும் வீரராக ஆனார்.

இந்நிலையில் அவர் இப்போது தோனியின் விக்கெட் எடுத்த தருணத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “தோனியின் விக்கெட்டை எடுத்தது எனக்கு வருத்தமாக  இருந்தது. திரும்பவும் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா? அவர் விளையாடுவதைப் பார்க்க முடியுமா என்றெல்லாம் என மனதில் ஓடிக்கொண்டிருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

ஜோஸ் பட்லருக்கு தொடையில் அறுவை சிகிச்சை.. 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா?

வெற்றி பெற 421 ரன்கள்.. அதிகபட்ச சேஸிங் ரன்களை எட்டுமா தென்னாப்பிரிக்கா...

டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கு கிரிக்கெட் போட்டி மாற்றமா? பிசிசிஐ விளக்கம்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சதமடித்து அசத்தல்.. இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவாரா ஜடேஜா?

3-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.. அபிஷேக் ஷர்மா அதிரடி அரைசதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments