Daily Horoscope

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஜெயிக்கப் போவது யார்? புதிய புரோமோ வெளியீடு

Written By Sinoj
Updated: வெள்ளி, 2 ஜூன் 2023 (18:02 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  கிரிக்கெட் போட்டி  நடைபெறவுள்ள நிலையில்,   புதிய புரோமோவை இன்று ஐசிசி அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள  நிலையில், இந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

இந்த இறுதிபோட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் விபரம் சமீபத்தில் வெளியான நிலையில்,  இந்த அணியின்  கேப்டனாக பேட் கம்மிங்ஸ்   நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, பிசிசிஐ, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான  15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது.

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை எதுவும் இந்திய அணி வெல்லாத நிலையில், இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இப்போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 13.2 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் வழங்கப்படவுள்ளது.

வரும் ஜூன் 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள உலக கோப்பை டெஸ்ட் போட்டியை  முன்னிட்டு சமீபத்தில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு  புதிய போஸ்டர் ஒன்றை ஐசிசி அமைப்பு வெளியிட்டது.

இந்த நிலையில்,  இறுதிப் போட்டி பற்றி ஒரு புரோமோ வீடியோவை  ஐசிசி வெளியிட்டுள்ளது.  இந்த வீடியோ ஒரு நிமிடம் ரன் டைம் கொண்டுள்ளது. இந்த வீடியோவில் இரு அணிகளின் விளையாட்டை மையப்படுத்தி  உள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments