அர்ஜுன் டெண்டுல்கரின் அறிமுகப் போட்டியில் நான் டிவியில் தோன்ற விரும்பவில்லை… சச்சின் சொன்ன காரணம்!
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான 20 லட்சத்துக்கே ஏலம் எடுத்தது. ஆனால் கடந்த சீசன் முழுவதும் அவரை விளையாட வைகக்வே இல்லை. இந்நிலையில் இந்த சீசனில் சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் எந்த போட்டியிலும் அவர் முழுமையாக 4 ஓவர்கள் பந்துவீசவே இல்லை. அதன் பின்னர் அவருக்கு கடைசியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமான போட்டியில் மும்பை அனியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர் டக் அவுட்டுக்கு வரவே இல்லை. இது குறித்து இப்போது சச்சின் ஒரு காரணத்தைக் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் “என்னுடைய ஆரம்ப கால போட்டிகளைப் பார்க்க என் குடும்பத்தினர் வருவார்கள். அதனால் என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதுபோல அர்ஜுனுக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகதான் அவர் அறிமுகமான போட்டியில் நான் டக்கவுட்டுக்கு வரவே இல்லை” எனக் கூறினார். அடுத்த சீசனிலாவது அர்ஜுன் டெண்டுல்கருக்கு முழுதாக வாய்ப்புகள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.