இன்றைய போட்டியில் கோலி கேப்டனானது ஏன்?... ஓ இதுதான் காரணமா?
ஐபிஎல் 16வது சீசன் லீக் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இன்றைய பிற்பகல் 3.30 மணி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. இன்றைய போட்டியில் RCB அணிக்குக் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த போட்டியில் இடுப்பில் ஏற்பட்ட தசைப் பிடிப்புக் காரணமாக அவதிப்பட்டார் பாஃப் டு பிளஸ்சி. அதனால் இன்றைய போட்டியில் அவரால் பீல்டிங் செய்ய முடியாத சூழல். அதனால் கோலி கேப்டனாக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.