செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (09:49 IST)

அவர் கேப்டனா வரலைன்னா ஆர்சிபி கதி அவ்ளோதான்..! – ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

இந்த சீசனில் ஆர்சிபி அணி மிக மோசமான தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் ஆர்சிபி அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப என்ன வழி என ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.



இந்த சீசன் தொடங்கியது முதலே ஆர்சிபியின் ஆட்டம் மோசமானதாக அமைந்து வருகிறது. நேற்றைய தோல்வியையும் சேர்த்து மொத்தம் 6 போட்டிகளில் 5 தோல்வியை ஆர்சிபி சந்தித்துள்ளது. ஆர்சிபியின் பேட்டிங் ஆர்டரும் வீக்காக உள்ளது. இந்நிலையில் ஆர்சிபியின் வெற்றிக்கு என்ன வழி என ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.

அதில் அவர் “நான் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று சொல்வேன். அப்படி செய்தால்தான் அந்த அணி குறைந்த பட்சம் வெற்றிக்காக போராடும். விராட் கோலி தன்னுடைய வீரர்களை கடுமையாக போராட வைப்பார். டூ ப்ளெசிஸ் அதை செய்ய வேண்டும். அவரால் சில ப்ளேயர்கள் வெளியே அமர்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சதமடிக்கும் வகையில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் சிலர் வெளியே அமர்திருக்கின்றனர். டூ ப்ளெசிஸ் கேப்டனாக இருப்பதால் கோலி எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார். அவரை கேப்டனாக்கினால் இந்த அணி போராடும். பிறகு வெல்லும்” எனக் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K