வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (15:03 IST)

பந்தை பிடிக்காமலே ஃபேக் ஃபீல்டிங்? விராட் கோலி மீது குற்றச்சாட்டு!

Kohli
நேற்று நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி பந்து இல்லாமல் ஃபேக் ஃபீல்டிங் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை டி20 போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிய உள்ளன. இந்த லீக் ஆட்டங்களில் குழு 1 மற்றும் குழு 2 என இரண்டாக பிரிக்கப்பட்டு தலா 6 நாட்டு அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.

நேற்று நடந்த லீக் சுற்றில் பங்களாதேஷ் அணியுடன் இந்திய அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 184 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு ஓவர்கள் குறைக்கப்பட்டு 151 ரன்கள் டார்க்கெட்டாக வழங்கப்பட்டது. ஆனால் பங்களாதேஷ் அணி 145 ரன்களில் தோல்வி அடைந்தது.


இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த போட்டியின்போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஃபேக் ஃபீல்டிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கையில் பந்து இல்லாமலே பந்தை வீசுவது போல போலியாக காட்டி பேட்ஸ்மேன்களை குழப்பும்  ஃபேக் ஃபீல்டிங் முறை ஐசிசி விதிகளின்படி குற்றமாகும்.

இந்நிலையில் கோலி கையில் பந்து இல்லாமலே ஸ்டம்ப்பை நோக்கி வீசுவது போல ஃபேக் ஃபீல்டிங் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளதால் அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edited By Prasanth.K