செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 4 மார்ச் 2023 (15:03 IST)

டெஸ்ட் போட்டிகளில் தடுமாறும் கோலி… மனைவியுடன் கோயிலில் வழிபாடு!

தற்கால கிரிக்கெட்டில் மூன்று வடிவிலான பார்மட்களிலும் மிகச் சிறப்பாக விளையாடி வருபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி. விராட் கோலி, கடந்த சில ஆண்டுகளாக மோசமான பார்மில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய ரன்மெஷின் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஆஸி அணிக்கு எதிரான பேட்டிங்கின் போது அவர் சர்வதேசப் போட்டிகளில் 25000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் ஆறாவது வீரராக நுழைந்துள்ளார் கோலி. இதற்கு முன்னர் சச்சின், காலிஸ், சங்ககரா, ரிக்கி பாண்டிங் மற்றும் மகேலா ஜெயவர்த்தனா ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவர் இன்னும் தன்னுடைய பழைய பார்மை மீட்டெடுக்க முடியாமல் தவித்து வருகிறார். பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட ஆஸி அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட அவர் சொல்லிக் கொள்ளும்படி  விளையாடவில்லை.

இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவுடன், மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜையினியில் உள்ள மகாகாளேஸ்வரர் ஜோதிர்லிங்கா கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளன.