1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 4 மார்ச் 2023 (10:03 IST)

சாய் பாபா பயோபிக்கை பேன் இந்தியா படமாக எடுக்கும் கலைப்புலி எஸ் தாணு!

தயாரிப்பாளர் தாணு தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவர். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார். இதையடுத்து விரைவில் அவர் சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இப்போது அவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு பேன் இந்தியா திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சமீபகாலமாக அவரின் எந்த படைப்புகளும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இப்போது தாணு, சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை பேன் இந்தியன் ரிலீஸாக உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் சாய் பாபாவாக ராமாயண புகழ் அருண் கோவில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை ஊமை விழிகள் அரவிந்தராஜ் இயக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.