செவ்வாய், 4 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 4 மார்ச் 2025 (15:29 IST)

ஹெட்டை தூக்கு.. வந்ததுமே மாஸ் காட்டிய வருண் சக்ரவர்த்தி! – இந்தியா பக்கம் திரும்புமா ஆட்டம்?

ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் அதிரடியாக ஆடிவந்த ஆஸ்திரேலியாவை விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் வருண் சக்ரவர்த்தி.

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதி போட்டி தற்போது துபாயில் நடந்து வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு முன்னேற உள்ள நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஷமி பந்துவீச்சில் கூப்பர் கான்லி டக் அவுட் ஆனது நிம்மதியை அளித்தாலும், ட்ராவிஸ் ஹெட் அதிரடியாக இறங்கி 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என ரன்களை குவித்து வந்தார்.

 

இந்திய அணியும் ஷமி, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா என பல பந்துவீச்சாளர்களை இறக்கியும் ட்ராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை தூக்க முடியவில்லை. இந்நிலையில் களமிறங்கிய இளம் பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது முதல் பந்திலேயே ட்ராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை தூக்கியுள்ளார். வருணின் பந்தை சிக்ஸர் அடிக்க ட்ராவிஸ் முயல அது சுப்மன் கில்லில் கேட்ச்சாக மாறி விக்கெட்டானது.

 

கடந்த போட்டியில்தான் முதன்முதலில் சாம்பியன்ஸ் ட்ராபியில் இறக்கப்பட்ட வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தற்போது ட்ராவிஸ் ஹெட்டை வீழ்த்தியுள்ளதால் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக மாறுமா? ரன்களை இந்தியா கட்டுப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K