வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (11:37 IST)

கண்ணுக்கு தெரியாத பந்து… என்னா வேகம்..! – உலக சாதனைக்கு தயாரான உம்ரான் மாலிக்!

Umran Malik
இந்திய அணியின் பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் பயிற்சி ஆட்டத்தில் உலக சாதனையை மிஞ்சிய வேகத்தில் பந்து வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் உம்ரான் மாலிக். இளம் இந்திய கிரிக்கெட் வீரரான உம்ரான் மாலிக் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார், அப்போது அவர் பந்து வீசிய வேகம், விக்கெட் வீழ்த்திய விதம் அவருக்கு உடனடியாக பெரும்பாலான ரசிகர்களை ஈட்டி தந்தது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயண ஆட்டத்திற்காக இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது, இந்த பயிற்சியில் உம்ரான் மாலிக் மணிக்கு 163.7 கி.மீ என்ற வேகத்தில் பந்து வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை சர்வதேச போட்டிகளில் அதிகபட்ச வீசும் வேகமாக மணிக்கு 161.3 கிமீ தான் பதிவாகியிருந்தந்து. ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர் 2003ம் ஆண்டு மணிக்கு 161.3 கிமீ வேகத்தில் பந்து வீசியதே உலக சாதனையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சாதனையை விரைவில் உம்ரான் மாலிக் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.