புதன், 1 பிப்ரவரி 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified புதன், 28 செப்டம்பர் 2022 (22:24 IST)

டி-20 கிரிக்கெட் : இந்திய அணி அபார வெற்றி

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியை திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற  இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின், மர்க்ராம் 25 ரன் களும், பார்ன்வெல் 24 ரன்களும், மகாராஜ் 41 ரன் களும் அடித்தனர். 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடியில் 106 ரன் கள் எடுத்து இந்தியாவுக்கு 107 ரன்கள் வெற்றி இலக்கு  நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் ராகுல் 51  ரன்களும், கோலி 3 ரன்களும், யாதவ் 50  ரன்களும் அடுத்தனர். எனவே  இந்திய அணி 16.4  ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு110  ரன்கள் அடுத்து வெற்றி பெற்றது.