சூர்யகுமார் & திலக் வர்மா அதிரடி ஆட்டம்… பஞ்சாப்புக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த இலக்கு!
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் 6 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இனிமேல் வரும் போட்டிகள் ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்தும் என்பதால் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இன்று மொகாலியில் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய மும்பை அணி நிதானமான தொடக்கத்தை அமைத்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் 8 ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமாருடன் ரோஹித் ஷர்மா ஜோடி சேர்ந்தார். அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாட ரோஹித் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் 53 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் ஆகியோர் கடைசி நேர அதிரடியில் இறங்கினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்கள் இழுப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பாக ஹர்ஷல் படேல் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.