புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 மே 2022 (11:06 IST)

அடுத்த லெவலுக்கு முன்னேறுமா ஹைதராபாத்! – டெல்லியுடன் இன்று பலபரீட்சை!

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்து தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளது.
அதேபோல 9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 4 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்து 7வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறலாம் என்பதால் சன்ரைசர்ஸ் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பாகிறது.