வியாழன், 28 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (11:37 IST)

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் நேற்று மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் சதமடிக்க, ஜடேஜா 86 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆட இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 81 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது.

இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கி ஆடிவருகிறது. நேற்று களத்தில் இருந்த ரிஷப் பண்ட் மற்றும் கில் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி விக்கெட்டை இழக்காமல் களத்தில் உள்ளனர். தற்பொது இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் சேர்த்துள்ளது. ஷுப்மன் கில் 86 ரன்களும் ரிஷப் பண்ட் 85 ரன்களும் சேர்த்துள்ளனர். இருவரும் சதமடிப்பதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது.