Daily Horoscope
✕

உன்னால் முடியும் தம்பி… தோனி சொன்ன ஒருவார்த்தை – ஷுவம் துபே மகிழ்ச்சி!

Written By vinoth
Updated: வெள்ளி, 23 ஜூன் 2023 (11:36 IST)
2022ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷிவம் துபே சிறப்பான அதிரடி ஆட்டத்தை மிடில் ஆர்டரில் வெளிப்படுத்தி வருகிறார். அதற்கு முன்னர் பெங்களூர் அணிக்காக அவர் ஆடியபோது சராசரியாக விளையாடியதால் அவர் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து ஷிவம் துபே சமீபத்தில் ஒரு நேர்காணலில் சிஎஸ்கே அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் “சிஎஸ்கே அணியில் நாங்கள் எப்போதும் அணியின் வெற்றியையே முக்கியமானதாகக் கருதுகிறோம். நான் சிறப்பாக விளையாடி அணி தோற்றாலும் அது எனக்கு மகிழ்ச்சியளிக்காது.  ஐபிஎல் நடுவில் தோனி என்னிடம் இனிமேல் உன்னால் தனியாக சில போட்டிகளை வெல்ல முடியும் எனக் கூறியது சிறப்பான ஒன்றாக இருந்தது. இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதுதான் என்னுடைய இலக்காக உள்ளது” எனக் கூறியுள்ளார்.
 

எல்லாம் காட்டு

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments