வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (10:59 IST)

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்.. கண்ணீர் விட்ட சர்பராஸ் கான் தந்தை மற்றும் மனைவி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டிகளுக்கான வாய்ப்புக்காக காத்திருந்த சரப்ராஸ் கான் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு டெஸ்ட் வீரருக்கான கேப் வழங்கப்பட்டது.

அப்போது அவருடன் இருந்த அவரின் தந்தை மற்றும் மனைவி ஆகிய இருவரும் மிகவும் உணர்ச்சிப் பூர்வமாகி கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.