ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (07:40 IST)

அஸ்வின் என் ஊரில் அதை செய்யவேண்டும் என்பதே விதி- ஜடேஜா கருத்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடக்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் நாளைய போட்டியில் முக்கியமான ஒரு மைல்கல் சாதனையை எட்ட உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 499 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள ஜடேஜா “அஸ்வின் மூன்றாவது போட்டியில் அவரின் 500 ஆவது விக்கெட்டை எடுப்பார். எனது சொந்த ஊரான ராஜ்கோட்டில் அவர் அந்த சாதனையை படைக்கவேண்டும் என்பது விதி. அவருக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.