Daily Horoscope
✕

தயவு செஞ்சு ரிவ்யூ எடுங்க.. கெஞ்சிய சர்பராஸ் கான்… வைரலாகும் புகைப்படம்!

Written By vinoth
Updated: வியாழன், 24 அக்டோபர் 2024 (16:21 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஒரு கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி மளமளவென விக்கெட்களை இழந்து 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தனர்.

இந்த போட்டியில் 59 ரன்களை மட்டும் கொடுத்து வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அனைத்து விக்கெட்களையும் அஸ்வின் மற்றும் சுந்தர் ஆகிய இருவரே கைப்பற்றினர்.

இந்த போட்டியில் ஒரு சுவாரஸ்யத் தருணத்தை சர்பராஸ் கான் உருவாக்கினார். நியுசிலாந்து அணியின் வில் யங் அஸ்வின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் அதற்கு நடுவர் முதலில் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் ஸ்லிப்பில் நின்ற சர்பராஸ் கான் அது கேட்ச்தான் என உறுதியாக சொன்னார். ஆனால் ரோஹித் அதை முதலில் ஏற்கவில்லை. அதனால் சர்பராஸ் கான் அவரிடம் கெஞ்சி ரிவ்யூ கேட்கவைத்தார். ரிவ்யூவில் அது அவுட்தான் என்பது தெரிந்து விக்கெட் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சர்பராஸ் கான் ரோஹித் ஷர்மாவிடம் கெஞ்சிய தருணத்தை ரசிகர்கள் பகிர்ந்து அவருக்கு வாவ் சொல்லி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

ஐபிஎல் 2027 தொடர்... வீரர்கள் ஏலம் தேதி குறித்த தகவல்.. கோவாவில் நடைபெறுகிறதா?

வீதியில் இறங்கி போராடும் ராகுல் காந்தி.. ஆனால் தேர்தல் அரசியலுக்கு கை கொடுக்குமா?

மழையால் நின்று போன 5வது டி20 போட்டி போட்டி.. மே.இ.தீவு கேப்டனுக்கு தொடர் நாயகன் விருது..

சஞ்சு சாம்சனின் அதிரடி தொடக்கம் இருந்தபோதிலும் தோல்வி ஏன்? கவாஸ்கர் கடும் விமர்சனம்...

சானியா மிர்சா சாதனையை முறியடித்த கோவை 17 வயது இளம் பெண்.. டென்னிஸ் உலகில் ஒரு மகுடம்...

அடுத்த கட்டுரையில்
Show comments