திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2024 (08:38 IST)

அடுத்தடுத்த மகிழ்ச்சி செய்தி.. குழந்தை பிறந்ததை பகிர்ந்த சர்பராஸ் கான்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார் சர்பராஸ் கான். அந்த தொடரில்  சில அரைசதங்களை அடித்துக் கலக்கினார். அதையடுத்து தற்போது நடந்து வரும் நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 150 ரன்கள் சேர்த்தது இந்திய அணியை மிகப்பெரிய தோல்வியில் இருந்து காப்பாற்றியது. இதனால் அவருக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன. இதனால் இந்திய டெஸ்ட் அணியில் அவரின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் சர்பராஸ் கானுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சிச் செய்தியாக அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரின் மனைவி ரோமானோ சஹூர் நேற்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் ஆனது.