சர்பராஸ் கான் ஆஸி பவுலர்களுக்குத் தலைவலியாக இருப்பார்- சஞ்சய் மஞ்சரேக்கர் சிபாரிசு!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார் சர்பராஸ் கான். அந்த தொடரில் சில அரைசதங்களை அடித்துக் கலக்கினார். அதையடுத்து தற்போது நடந்து வரும் நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 150 ரன்கள் சேர்த்தது இந்திய அணியை மிகப்பெரிய தோல்வியில் இருந்து காப்பாற்றியது. இதனால் அவருக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.
இதுபற்றி பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர் “சர்பராஸ் கானைக் கண்டிப்பாக நாம் ஆஸ்திரேலிய தொடருக்கு ஆழைத்துச் செல்ல வேண்டும். ஏனென்றால் அவர், ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு எதிராக ஆடும் திறமையைக் கொண்டுள்ளார். அவரால் ஆஸி பவுலர்களுக்கு தலைவலியை ஏற்படுத்த முடியும். அதனால் ஆஸி தொடருக்கு எதிரான பிளேயிங் லெவனில் அவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.